Sunday, November 13, 2011

தனியார் பஸ்கள் நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகல்

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடாளாவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலக ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும், எரிபொருள் விலை உயர்வினால் பஸ் உரிமையாளர்கள் பெரும் நட்டமடைந்துள்ளதால் அதன் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், டீசலின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் 20 கோடி ரூபா வரையில் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இந்த இழப்பினை தாங்களால் ஈடு செய்ய முடியாத காரணத்தினால் தொடர்ந்து நட்டத்துடன் சேவையில் ஈடுபடமுடியாத நிலையில் போக்குவரத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment