Thursday, November 24, 2011

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பதவிக்கு புதிதாக விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் கணிதம். ஆங்கிலம் பட்டதாரிகளும் ஆங்கில டிப்ளோமாதாரிகளும் சேர்;த்து கொள்வதற்கு விண்ணப்பம் கோரியுள்ளதாக கிழக்கு மாகாண அரச சேவை ஆணையாளர் சபையின் செயலாளர் எச்.ஈ.எம். டப்லியூ.பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையின் மூலம் இந்த ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வயது 18- 45 வரையில் உட்பட்வர்களாக இருத்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதியிடமாக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.

வெளி மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளும் அதற்காக. விண்ணப்பிக்கலாம். கிழக்கு மாகாணத்திலுள்ள நிரந்திர வதிவிடங்களைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கு கொள்ளும் இறுதித் திகதியுடன் ஆறுவருடங்களை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் இரண்டு வருடங்கள் அந்த மாகாணத்தில் கட்டாயமாக நிரந்திரவிதிவிடத்தைக் கொண்டிருந்தல் வேண்டும்.

தெரிவு செய்யப்படுவர் ஆரம்ப நியமனத்தின் போது கிடைக்கும் சுற்றுவட்டத்திற்குள் கட்டாயமாக ஐந்து வருடங்கள் சேவையாற்ற வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சுற்று வட்டங்களில் 10 வருடங்கள் சேவையாற்ற வேண்டும் என்பதுடன் அந்தக் காலங்களின் போது என்ன காரணங்கள் வந்தாலும் சரி இடமாற்றம் வழங்கப்படமாட்டாது.

இந்தப் பரீட்சை கிழக்கு மாகாணத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மாத்திரம் நடைபெறும். திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாரை, கல்முனை, ஆகிய நகரங்களிலே நடைபெறும். பரீட்சை நடைபெறுத் தினத்தை கிழக்கு மாகாண அரச சேவை ஆணையாளர் சபையின் செயலாளர் அலுவலகம் மூலம் அறிவித்தல் விடுக்கப்படும்.

விண்ணப்பப் பத்திரங்கள் இந்த மாதம் 30 ம் திகதி பிரதான செயலாளர் அலுவலகம் அரச சேவை ஆணையாளர் சபை, கிழக்கு மாகாணம் 198, துறைமக வீதி, திருகோணமலை என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்தல் வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com