Tuesday, November 29, 2011

துமிந்த நாடு திரும்பியவுடன் கைது செய்வோம் - இரகசிய பொலிசார்

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என, இரகசிய பொலிசார் இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

துமிந்த சில்வா கடந்த ஒக்டோபர் மாதம் 8ம் திகதி கொலன்னாவையில் வைத்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேரின் கொலை தொடர்பாக சந்தேக நகராகக் கருதப்பட்டு, இக்குற்றச் சாட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரகசிய பொலிசார் இதனைத் தெரிவித்தனர்.

உரிய நீதி கிடைக்காவிடில் விடயத்தினை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று நீதியினை பெற்றுக்கொள்ள தயங்கமாட்டேன் எனவும் அதற்காக தேசத்துரொகி என்ற பட்டத்தினை எவரும் சுமத்த முனையக்கூடாது எனவும் காலஞ்சென்ற அமைச்சரின் மகள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment