ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழு விரைவில் தனிக்கட்சி
ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் மாதமளவில் புதிய இடதுசாரி கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர்கள் எதிர்வரும் மாதம் ஜே.வி.பியை விட்டு உத்தியோகபூர்வமாக பிளவடைந்து செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜே.வி.பி.யின் மத்திய குழுவைச் சேர்ந்த 23 அங்கத்தவர்கள் இந்த மாற்றுக் குழுவில் இடம்பெற உள்ளதாக தெரிய வருகிறது.
கட்சி நிர்வாகக் கட்டமைப்பை தீர்மானிக்கும் நோக்கில் பொதுச்சபைக் கூட்டமொன்று டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் கட்சிக்கு பெயர் ஒன்றை இதுவரை தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
0 comments :
Post a Comment