Friday, November 25, 2011

தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட செயற்குழு

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் விசேட செயற்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அனைவரும் ஒரே இனமாக வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அரசியலமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள்,பரிந்துரைக்கப்பட்டு, அறிவிப்பதற்காக பாராளுமன்ற செயற்குழுவை அமைக்கும் யோசனையை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்தார்.

அனைத்து மக்களினதும் சுய உரிமையை பாதுகாக்கும் வகையிலும், அதனை மேம்படுத்தும் நோக்கிலும், ஒரே இனமாக கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும். இதற்கு தேவையான அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள், பரிந்துரைக்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது, விசேட செயற்குழுவின் பொறுப்பாகும். சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவில், 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்க வேண்டுமென அரசாங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment