Tuesday, November 15, 2011

மன்னாரில் மீள்குடியேறிய மக்கள் மீன் பிடித்தொழிலை ஆரம்பித்துள்ளனர். வீடியோ

மன்னார் மாவட்டத்தில் முசலி செயலாளர் பிரிவில் கொண்டச்சிக் குடா கடற்கரை துறை முகத்தில் தற்பொழுது மீன்பிடி பருவக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்த மீன்பிடிக் காலம் இம்மாதம் தொடக்கம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நடைபெறும்.

தற்பொழுது இந்த கடற்கரையில் பாரை, பாலை , சீலா, மொரல், சிங்கு இறால், நண்டு, சுறா, திருக்கை போன்ற பல்வேறு பெரிய, சிறிய வகையிலான மீன் வகைகள் பிடிக்கப்படுகின்றன.

இங்கு பிடிக்கப்படும் பெருந்தொகையான மீன்கள் விற்பதற்காக கொழும்புக்கு ஏற்றுகின்றனர்.

இந்தக் காலப் பருவத்தில் மீனவர்கள் பாரிய நன்மை அடைவார்கள். அரசாங்கம் இவர்களின் மீன் பிடித் தொழில் முயற்சிகளுக்காக பல்வேறு பணிகளைப் புரிந்து வருகின்றன.

No comments:

Post a Comment