போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரபல பாடகர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம பெரக்கும் மாவத்தையிலுள்ள போதை பொருள் விற்பனை நிலையமொன்றிலிருந்து ஹெரோயின் போதை பொருளை பெற்று பயன்படுத்தச் சென்ற போது, இவர் கைது செய்யப்பட்டார். இவருடன் போதை பொருளை எடுததுச் சென்ற பிரபல வாத்திய கலைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் நீண்டகாலமாக போதை பொருளுக்கு அடிமைப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் வலை விரித்து இவர்களை கைது செய்துள்ளதுள்ளனர். இந்த விற்பனை நிலையத்தை நடத்தி வந்த பெண் அப்பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment