Thursday, November 24, 2011

அரசியல் தலையீட்டால் இலங்கை தேயிலைச் சந்தையில் விலை வீழ்ச்சி

கொழும்பு தேயிலை ஏலத்தில் பிரதான கொள்வனவாளரான அக்பர் பிரதர்ஸ் கம்பனி தேயிலை கொள்வனவை மேற்கொள்ளாத காரணத்தினால் தேயிலை சந்தை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேல்மாகாண அரசியல்வாதியொருவர் தொடர்ந்தும் தனது கம்பனி மீது மேற்கொள்ளும் அரசியல் அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்பர் பிரதர்ஸ் கம்பனி தேயிலை ஏலத்திலிருந்து விலகியதாக அறிவிக்கப்படுகின்றது.

அக்பர் பிரதர்ஸ் கம்பனி தேயிலை ஏலத்திலிருந்து விலகி கொண்டமையினால் போட்டித்தன்மையிலான விலை கிடைக்காமல் போயுள்ளது. இதனால் ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலை 25 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொழும்பு தேயிலை சந்தையில் 25 சதவீதமான தேயிலையை அக்பர் பிரதர்ஸ் நிறுவனமே கொள்வனவு செய்கின்றது.

No comments:

Post a Comment