Tuesday, November 22, 2011

முறையாக பொதிசெய்யப்படாத உணவுப் பொருள் விற்பனை தொடர்பாக அறிவியுங்கள்.

உரிய தரத்திற்கு அமைவாக பொதி செய்யப்படாத உணவு பொருட்கள் தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய முறையில் பொதி செய்யப்படாமையினால் உணவு பண்டங்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே காலாவதியாகின்றது. இவ்வாறான உணவு பண்டங்களை உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் நுகர்வோரை தாக்குகின்றன. இதனால் சரியாக பொதி செய்யப்படாத உணவு பண்டங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் நாடெங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான முறைப்பாடுகளை 0112 368 727 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உணவு கட்டுப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்குமாறு சூழல் மற்றும் தொழில்சார் துறை பணிப்பாளர் டாக்டர் ஆனந்த ஜெயலால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment