Monday, November 7, 2011

ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா பயணம்: பதில் எதிர்கட்சித் தலைவராக ஜோன் அமரதுங்க

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா நோக்கிச் சென்றுள்ளார். ரணிலின்வெளிநாட்டு விஜயத்தை அடுத்து பதில் எதிர்கட்சித் தலைவராக எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் எதிர்கட்சித் தலைவராக பிரதித் தலைவர் கரு ஜயசூரியவோ, இணை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ நியமிக்கப்படாமல் எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை பல்வேறு கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.

No comments:

Post a Comment