ஜனாதிபதியின் பிறந்த தினத்தையிட்டு நீர்கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வு
ஜனாதிபதியின் 66 ஆவது பிறந்த தினத்தையிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷணி பெர்னாண்டோ புள்ளேயினால் கன்றுக்குட்டியொன்று விடுவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று மாலை நீரகொழும்பு - வெலிஹேன அருள்நிறை கன்னியர் சபையில் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷணி பெர்னாண்டோ புள்ளேயினால் கன்றுக்குட்டி கன்னியர் சபையில் விடுவிக்கப்பட்ட பின்னர், அருட்தந்தை ரொயிஸ் தலைமையில் விசேட திருப்பலி பூசை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கன்னியர் சபையின் பொறுப்பாளர் அருட்சகோதரி புஷ்பா அன்ரனி உட்பட மேலும் பல அருட் சகோதரிகளும்,சிறுவர்களும், பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்
0 comments :
Post a Comment