Friday, November 4, 2011

இங்கிலாந்தில் புதிய சட்டம்;விவாகரத்து செய்த தந்தைகள் குழந்தைகளை சந்திக்க தடை

இங்கிலாந்தில் விவாகரத்து செய்த தந்தைகள் குழந்தைகளை சந்திக்க தடை விதித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. விவாகரத்து செய்தவர்கள் தங்கள் குழந்தைகளை சந்திக்க சட்டம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இங்கிலாந்தில் அந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனது மனைவியை விவாகரத்து செய்த தந்தைகள் தங்கள் குழந்தைகளை சந்திக்கும் உரிமையை இழக்கிறார்கள். டேவிட் நார்குரோவ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் இது குறித்து அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில் இங்கிலாந்தில் மனைவியை விவாகரத்து செய்த ஆண்கள் 8 சதவீதம் பேர் உள்ளனர். அதாவது 2 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு 3 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் தாயின் பராமரிப்பில் வாழ்கின்றனர். இந்த குழந்தைகளை அவர்களின் தந்தைமார்கள் அவ்வப்போது சந்திக்கின்றனர். குழந்தைகளுக்கு தாயும், தந்தையும் ஒருங்கிணைந்து அன்பு செலுத்த வேண்டும். அதுதான் ஒரு அர்த்தமுள்ள நல்லுறவை ஏற்படுத்தும்.

ஆனால் தாயிடம் வாழும் குழந்தைகளை தந்தை தனியாக வந்து பார்ப்பது குழந்தைகளிடம் ஒருவித சோகத்தை ஏற்படுத்துகிறது. தாங்கள் ஒதுக்கப்பட்டதாக கருதுகிறார்கள். இது அவர்கள் மனதில் வெறித்தனம் மற்றும் கொடூர எண்ணத்தை உருவாக்குகிறது. எனவே விவாகரத்து செய்த தந்தைகள் தங்களது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கக்கூடாது. அதற்கான உரிமையை அவர்கள் இழக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை புதிய சட்டமாக விரைவில் அமலாகிறது. மேற்கண்ட தகவலை இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com