இலங்கையில் தங்களுடைய படை பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் புலிகள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை இந்தியாவில் நுழைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய உளவுத்துறையினர் மும்பை அரசுக்கு தெரிவித்து முழு எச்சரிக்கையாக இருக்குமாறு அலர்ட் செய்துள்ளனர் என இந்திய முன்னணி ப த்திரிகைகள் யாவும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பெரும் போரை நடத்தி தலைவர் முதல் அனைவரும் உயிரிழந்து விட்டாலும், இவர்களில் இருந்து தப்பிய சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், பணம் வசூலித்து மீண்டும் தங்கள் இயக்கத்தை உயிர்ப்பிக்க வைக்கவும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் மாலத்தீவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றபோது ஒரு நிருபரிடம் ஒத்துக்கொண்டார்.
இந்நிலையில் மத்திய உளவுத்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலில் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவிற்குள் நுழைவதில் சிரமம் இருப்பதால் மாற்று வழியை தேடினர். ஏற்கனவே இந்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கும் புலிகள் மற்றும் பஞ்சாபை மையமாக கொண்டுள்ள சீக்கிய பயங்கரவாத அமைப்பனா பப்பர் கல்சா போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மும்பையில் குறிப்பாக கடற்படை தளம் அமைந்திருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இந்த 3 அமைப்பினரும் இது தொடர்பாக பேசி முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க மும்பை போலீசார் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஐ.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில் ; செயல் இழந்து நின்ற புலிகள் இயக்கத்தினர் கடந்த 2 மாதத்தில் சற்று வளர்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இரு அமைப்பினரின் மறைமுக செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அம்பாலாவில் ஒரு காரில் வெடிபொருட்களுடன் நின்ற கார் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது, இந்த சம்பவத்திற்கும் இந்த அமைப்பினருக்கும் தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment