புத்தூர் வங்கிக் கொள்ளை சந்தேகநபருக்கு புலிகளுடன் தொடர்பா? தடுப்பு காவலில் விசாரணை
மட்டக்களப்பு -புத்தூர் வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். மொஹமட் அயிசார் என்ற பெயருடைய குறித்த சந்தேகநபர் கடந்த 15ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக கைது செய்யப்பட்டவர் மீது இரகசிய பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.
அதனால் தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
0 comments :
Post a Comment