Monday, November 21, 2011

அமெரிக்காவை தாக்க அல் கைதா தொடர் முயற்சி. ஒருவர் வெடிபொருட்களுடன் கைது.

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு முயன்ற அ‌ல் குவைதா அமை‌ப்பை சே‌ர்‌ந்த பய‌ங்கரவா‌தி ஒருவனை காவ‌ல்துறை‌யின‌ர் செ‌ய்து‌ள்ளன‌ர். அல்குவைதா அமைப்புக்கு ஆதரவாளரான 27 வயது இளைஞ‌ன் ஒருவ‌ன் நியூயார்க்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பொருள்களுடன் அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் உள்ளிட்டோரை குறிவைத்து செயல்பட முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக மேயர் மிச்சேல் ப்ளூம்பர்க் தெரிவித்தார்.

டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஸ் பிமெண்டல் என்ற இளைஞரை கைது செய்ததாகவும், அவர் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டவர் என்றும் அவர் கூறினார்.

நியூயார்க்கின் புறநகரில் சில காலம் வசித்து வந்த அவர், தற்போது நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்ததாக நியூயார்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி கூறியுள்ளார்.

இவர் மீது கடந்த 2009ம் ஆண்டு முதலே கண்காணிப்பு இருந்ததாகவும், அல்குவைதா அமைப்பின் பிரசாரத்தால் அதில் ஈர்க்கப்பட்ட அவர், ஆப்கன், ஈராக் உள்ளிட்ட இடங்களில் இருந்து திரும்பும் அமெரிக்க ராணுவத்தினர், தபால் துறை, ராணுவத்துறையினரைக் குறிவைத்து குண்டுகள் வைப்பதற்கும் கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்த போது கைது செய்யப்பட்டதாகவும் ப்ளூம்பர்க் கூறினார்.

மேலும் தனது இணையதளத்தில் மேற்குலகை சீரழிக்க ஒவ்வொரு இஸ்லாமியரும் உறுதிபூணுவோம் என்று குறிப்பிட்டிருந்ததாக அவர் கூறினார்.

நியுயோர்க் சிற்றி பொலிஸ் மேஜர் மிக்கைல் கைது தொடர்பாக சிஎன்என் க்கு தெரிவித்த கருத்து கிழுள்ள வீடியோவில்



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com