ராஜீவ் கொலையாளிகள் 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது கருணை மனுவை ஜனாதிபதி கடந்த ஆகஸ்டு மாதம் நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 3 பேரின் தூக்கு தண்டனைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்தது.
நீதிபதிகள் சி.நாகப்பன், பி.சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி கூறியதாவது:-
இந்த வழக்கில் மாநில அரசு பதில் மனுதாக்கல் செய்து இருந்தது அந்த மனுவை மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் உள்துறை செயலாளர் கூடுதலாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த 3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு எதிர்க்கவில்லை. தண்டனையை குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
இப்போதாவது வைகோ திருப்தி அடைவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வைகோ சிரித்தவாறு சரி என்றார். இதை நாங்களும் புரிந்து கொண்டோம் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment