இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 'நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும்' என்ற தலைப்பில் கொழும்பில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
'இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்' என்று அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment