திருக்கோணமலை - சம்பூர் - பாட்டாளிபுரம் பகுதியில் கடந்த 24ம் திகதி ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். சேனையூர் மற்றும் சந்தோஷபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறித்த ஆசிரியை அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment