Saturday, November 26, 2011

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கள்

வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் 66 ஆவது பிறந்த தினத்தையிட்டும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமானதையிட்டும் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.

நீர்கொழும்பு மேயர் அன்ரணி ஜயவீர தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதி மேயர் எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஐஹான்

No comments:

Post a Comment