Saturday, November 12, 2011

பாரத கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான “தத்பர கட்டா’ கடத்தப்பட்டார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையான “தினமின” செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெவே பிரியந்த எனப்படும் “தத்பர கட்டா’ என்ற நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். அவர் மின்னேரியா,தியபெதும ,நேஹின்ன பிரதேசத்தில் மறைந்திருந்த போது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருடன் இருந்த மற்றுமொரு நபரையும் அந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

“தத்பர கட்டா’ மற்றும் தெமட்டகொட சமிந்த, சரத் பண்டார ஆகியோர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு தப்பியோடிய தெமட்டகொட சமிந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,சரத் பண்டார என்ற சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

கலபொட என்னும் வேறு பெயரும் இருந்ததாகக் குறிப்பிடப்படும் இச் சந்தேகநபருக்கு பல்வேறு படுகொலைச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. “தத்பர கட்டா’ என்ற இச் சந்தேக நபர் ஹெட்ட இந்திக,தொப்பே சமிந்த, கராட்டே தம்மிக்க ஆகியோரின் பாதாள குழுவிலும் இருந்துள்ளார்.
.

No comments:

Post a Comment