Friday, November 25, 2011

நீரழிவு நோயாளர்களுக்கு விசேட அறிவித்தல்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் வருடாந்த கண் பரிசோதனைக்கு தேசிய கண் வைத்தியசாலையில் பதிவு செய்து கொள்ளுமாறு, அவ்வைத்தியசாலை அறிவித்துள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் கண் பார்வையை இழக்கும் அபாயத்திற்கு உட்பட்டுள்ளனர். இந்த நோயாளர்கள், குளுக்கோமா நிலையை அடைவதனால், கண் பார்வையை இழக்கின்றனர். முறையான கண் பரிசோதனையின்றி, வேறு முறைகளில் நோய் தொடர்பாக புரிந்து கொள்ள முடியாது. இதனால், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை, சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இது தொடாபான தகவல்களை 0112 63 39 11 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக, தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment