அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம்- நாளை கருத்தரங்கு
அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம் என்ற தொனிப் பொருளில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு ஐயவர்தன நிலையத்தில் கருத்தரங்கொன்று இடம் பெறவுள்ளது.
இணையத்தளங்களுக்கான தடைகளுக்கு எதிராகவும்,அரசியல் வன்முறைகளை கண்டிப்பதற்காகவும், தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையை வெற்றி கொள்வதற்கான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு விஷேட உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.
பிரஜைகளின் உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான சட்டத்தரணிகள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்
0 comments :
Post a Comment