Wednesday, November 16, 2011

ரிசானா தொடர்பில் கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழு சவூதி விஜயம்

இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானா நபீக்கினால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை சந்திப்பதற்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவே அங்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் இப்ராகிம் சகிப் அன்சார் மற்றும் மொஹமட் செரிப் மொஹமட் தவுபிக், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் ரியாத் சென்றடைந்துள்ளனர். மேலும் மேல் மாகாண ஆளுநர் அலவி மவுலானா இன்று ரியாத் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இந்தக் குழுவினர் ரிசானா நபீக் சார்பில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் மன்னிப்பு கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர்.

2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின் 23 வயதுடைய ரிஸானாவை ரியாத் சென்றுள்ள அவருடைய பெற்றோர் முதன்முதலில் சந்தித்துள்ளனர்.

தவாட்மி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிஸானா தனது தந்தை மொஹமட் மற்றும் தாய் ரிப்னா ஆகியோரை சந்தித்தபோது அழுது கொண்டே "என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என கெஞ்சியுள்ளார்.

ரிஸானாவை காப்பாற்ற குழந்தையை பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிஸானாவை நேரில் சந்திக்க அவருடைய பெற்றோருக்கு வாய்ப்பளித்தமைக்கு ரியாத் தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் சமூகப் பணியாளர் இப்திகார், சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரிஸானாவை காப்பாற்ற குழந்தையை பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment