Friday, November 11, 2011

புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு உதவும் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவுகள் ரத்து.

வெளிநாடுகளில் செயற்படும் புலிகளுக்கு ஆதரவு வழங்கும், வெளிநாடுகளில் உள்ள ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. இவர்களுக்கு ஓய்வூதிய வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் 5 லட்சம் அமெரிக்க டொலர்களை செலவிடுகிறது. கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

புலிகளின் ஆதரவாளர்களான முன்னாள் அரசாங்க ஊழியர்கள் தூதரக அலுவலங்களுக்கு வந்து, ஓய்வூதியத்தை பெற்றுச் செல்வதாகவும் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக போர் குற்றங்களை சுமத்துவதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துளளதாக திவயின கூறியுள்ளது.

அதேவேளை வெளிநாடுகளில் உள்ள முன்னாள் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாழ்க்கை செலவு கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment