தெற்கு கடுகதி வீதியில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்திலும் கூடுதலான வேகத்தில் பயணம் செய்யும் சாரதிகளுக்கு தண்டப் பணம் அறவிடுவதற்காக சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலான வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைக் கண்டு பிடிப்பதற்கான விஷேட கருவிகள் தெற்கு கடுகதி வீதியில் பொருத்தப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. இதேநேரம் தான் கடுகதி வீதியில் மணிக்கு 180 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்திருந்தார்.
தெற்கு கடுகதி வீதியில் வேக வரையறைகளையும் சட்ட திட்டங்களையும் மீறிய முதாலாவது குற்றவாளியாக அமைச்சர் குமார வெல்கம கருதப்படுகின்றார். இதற்காக அவருக்கு முதலாவது தண்டப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment