Friday, November 25, 2011

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் அகமது அப்பாஸ். இவரது மனைவி ஷினாப்பீவி (32) அகமது அப்பாஸ் தனது மனைவி ஷினாப் பீவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்திருந்தார். மேலும் அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

அதை அறிந்த ஷினாப்பீவி ஆத்திரம் அடைந்தார். எனவே, தனது கணவர் அகமது அப்பாசை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை மறைக்க என்ன வழி என யோசித்தார். கணவர் அகமது அப்பாசின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ஷினாப் பீவியை கைது செய்தனர்.

மேலும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் ஷாகீர் (22), ஷாபைசல் ஆகியோரும் பிடிபட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment