இலங்கை இராணுவம் எவரையும் கடத்தவில்லை : இராணுவப் பேச்சாளர்.
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவன் வேதரணியம் லத்திஸ் என்பவர் நேற்று முன்தினம் கைதடி சித்த மருத்துவ மாணவர் விடுதியில் இருக்கும் போது காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இவர் நேற்று மாலை வீடு திரும்பியதாக அவரது குடும்பத்தினர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்பொருட்டு குறிப்பிட்ட மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் கப்புஆ ராச்சி அவர்களை இலங்கைநெற் தொடர்பு கொண்டு இவ்விளைஞன் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என வெளியான செய்திகள் தொடர்பாக கேட்டபோது, இராணுவத்தினர் எவரையும் கடத்துவதில்லை எனவும், இக்கடத்தல் நாடகம் தொடர்பான உண்மைகளை அறியும் பொருட்டு பொலிஸார் குறிப்பிட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்த அவர் விசாரணை முடிவில் மேற்படி கடத்தல் நா டகத்தின் உண்மைகள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment