Wednesday, November 23, 2011

கடாபியின் மகன் பெண் பித்தர் முன்னாள் மனைவி பகிரங்கம்

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியின் மகன் சயீப், ஒரு பெண் பித்தர் என, அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி, சமீபத்தில் போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலை மறைவாக இருந்த அவரது மகன் சயீப் அல் இஸ்லாம், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது முன்னாள் மனைவி நாடியா, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் காபரே நடனம் ஆடி வந்தார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்த நாடியா, பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நைட் கிளப்பில் நடனமாடி வந்த நான், என்னுடைய கன்னி தன்மையை சரிசெய்ய ஆப்பரேஷன் செய்து கொண்டு, சயீப்பை திருமணம் செய்து கொண்டேன். இதற்காக நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். ஆனால், அவரது குடும்பத்தினர் என்னை மருமகளாகவே பாவிக்கவில்லை.

சயீப் பெண் பித்தர். எங்கள் வீடு விபசார விடுதி போல தான் இருக்கும். எப்போதும் அவரது நண்பர்களும், பெண்களும் கூத்தடித்து கொண்டு இருப்பார்கள். பெண் வெறியரான சயீப், எல்லோர் முன்பாக உடலுறவு கொள்ளும் வேட்கை கொண்டவர். அவரது செயலால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஓட்டலில் என்னை நன்றாக உதைத்து, ஜன்னல் வழியாக தூக்கி வீசி எறிந்தார். இதனால், பலத்த காயமடைந்து, 47 நாட்கள் கோமாவில் கிடந்தேன். இதை அறிந்த கடாபி, இந்த சம்பவத்தால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதாக, அவரது மகனை கண்டித்தார். இதனால், அவர்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே அந்த குடும்பத்தின் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவரிடம் பிரிந்து மாஸ்கோ திரும்பி விட்டேன். மீண்டும் சேர்ந்து வாழ 2008ல், என்னை அழைத்தார். ஆனால், நான் மறுத்து விட்டேன். இவ்வாறு நாடியா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கொலல்ப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாக அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் ஃபுல் மேக்கப்புடன் பெண் பாதுகாவலர்கள் இருந்தனர். அவருக்காக குண்டடி பட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு. இந்நிலையில் கடாபியின் பெண் பாதுகாவலர்கள் பற்றி அவரிடம் 7 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்த பைசல் கூறியதாவது,

கடாபி ஒரு செக்ஸ் பைத்தியம். அவரால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. தினமும் 4 முதல் 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு வைத்தார். அது அவருக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

தினசரி அந்த பெண் பாதுகாவலர்கள் அவரது அறைக்கு செல்வார்கள், அவருடன் உடலுறவு வைப்பார்கள், அதன் பிறகு முகம் சிவந்து வெளியே வருவார்கள்.

அவர்கள் அனைவருமே கடாபியுடன் உறவு வைத்துள்ளனர். கடாபியுடன் யார் மிகவும் ஒட்டி, உறவாடுகிறார்களோ அவர்களுக்கு பங்களா, கட்டு கட்டாக பணம் கிடைத்தது. அவர்கள் கடாபியுடன் உறவு வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் நேராக மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். காரணம் அவ்வளவு உள்காயம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

மேலும் கடாபி ஆண்மையை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மருந்துகளையும் சாப்பிட்டு வந்துள்ளாராம். இதை அதிகமாக சாப்பிடக் கூடாது என்று கடாபியுடன் நெருக்கமாக இருந்த உக்ரைன் நாட்டு நர்ஸ் அவ்வப்போது கடாபிக்கு எடுத்துக் கூறுவாராம், ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம் கடாபி.

லிபியாவில் புரட்சி வெடித்த பிறகு தலைமறைவாக இருந்த கடாபியை கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து போராளிகள் கொன்றனர். அவரது உடலை அனைவருக்கும் தெரியும்படி அடக்கம் செய்தால் அந்த இடத்தை யாராவது வணக்க ஸ்தலமாக ஆக்கிவிடுவார்கள் என்பதற்காக ரகசிய இடத்தில் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com