Sunday, November 27, 2011

ஆசை நாயகிக்காக அடுத்தவர் வீட்டை அபகரித்த அரசியல்வாதி. குடும்பம் ஒன்று மாயம்!

தனது ஆசை நாயகியின் விருப்பத்தை ஒரு பாராளுமன்ற MP மூலம் ஒரு மாகாணசபை உறுப்பினர் நிறைவேற்றிக்கொண்ட சம்பவம் சமீபத்தில் கொழும்பு DEHIWALA பகுதியில் நடந்துள்ளது. தனது முகாமையாளரின் புதிய வீட்டுப்பக்கம் தனது ஆசை நாயகியை அழைத்து சென்றிருக்கிறார் ஐ .தே.க மத்திய மாகாணசபை உறுப்பினர் எம். உதயகுமார் அவர்கள். அந்த வீட்டை பார்த்த அவரது ஆசை நாயகி அந்த வீடு தனக்கு எப்படியாவது வேண்டும் என்று கூற, சொந்தகாரரோ அது தன் மனைவியின் வீடு என கூறி அதை தர முடியாது என்றும் கூறி இருக்கிறார். நினைத்தை நடத்தும் அவரோ தனது நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் பலம்மூலமும், பாதாள உலகத்தினரின் உதவி உடனும் அந்த வீட்டை பலாத்காரமாக பிடுங்கி எடுத்திருக்கிறார்கள். வீட்டை தர மறுத்தால் அந்த தம்பதிகள் இரண்டு பேரையும் கொன்று விடுவதாக கூறி மிரட்டி அந்த வீட்டை வாங்கி உரிமையாளர்களை வெளியேற்றி இருக்கிறார்.

இதற்கு ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தால் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டியிருக்கிறார்கள். இந்த மனித உரிமை மீறிய செயல் கொழும்பு தெகிவளையில் அத்திடிய எனும் இடத்தில் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஒரு தகவலும் இது வரை இல்லையாம்.

அவர்கள் கூறியது போல் இப்படி அதிகார துஸ்பிரயோகம் செய்தது யாருக்காவது தெரிந்தால் தனது பதவிக்கு ஏதும் ஆபத்து வரலாம் என்று எண்ணி அந்த வீட்டில் இருந்தவர்களை இவர்கள் ஏதும் செய்திருக்கலாம். எனினும் இவ்விடயம் குற்ற புலனாய்வு துறை (CTD ) , மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான மக்கள் ஏமாற்றுகாரர்களின் முகத்திரை கிழிய வேண்டும்.

இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டுள்ள அந்த மாகாண சபை உறுப்பினர் தனது நாடாளுமன்ற உறுப்பினருடன் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து கொண்டுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வோம் என்று ஓட்டு வாங்கி விட்டு ஆசை நாயகிகளுக்காக சேவை செய்யும் இவர்களை போன்றவர்கள், கள்ள காதலுக்காக ஒரு குடும்பத்தின் கருவறுத்த இவர்களை எல்லாம் யார் கேள்வி கேட்பது ?

7 comments:

  1. Some evils how they misuse their
    power.It's really a shame to the figures those who play role in the public.Will the justice play a good role on this matter.....? Thousands of us are hiding our misery behind happy mask.We don't know how some rotten apples get elected to represent some important institutions.....! Only God knows.

    ReplyDelete
  2. ivanellam oru manusan....?

    ReplyDelete
  3. ithai janathipathi paarvaikku kondu poga vendum. ungal amacchargalin letchanam ithu thaan ena katta vendum.

    ReplyDelete
  4. ivargalathu pathavigal parikkapada vendum.

    ReplyDelete
  5. ithu avar manavikku theriyumaaaaaaaaaaaaaaaaaaa...............?

    ReplyDelete
  6. அதிகார துஸ்பிரயோகம் செய்யும் இவர்களை போன்றவர்களின் பதவியையும் அதிகாரத்தையும் பறிக்க வேண்டும்- கண்ணன்

    ReplyDelete
  7. பாதிக்க பட்டவர்கள் சார்பில் யாராவது இருந்தால் உடனே இலங்கை அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடவும்.

    LLB Club

    ReplyDelete