Wednesday, November 2, 2011

நாட்டை முன்னேற்றுவதற்கு JVP க்கு உண்மையில் தேவை உள்ளது - அமெரிக்கா

நாட்டை முன்னேற்றுவதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு உண்மையில் தேவை இருப்பதாக அமெரிக்கா கருதுவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்ள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் சிலருடன் கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புருடெனிஸ் இதனை கேபல் செய்தியாக அனுப்பி வைத்துள்ளதுடன். நாட்டை முன்னேற்றுவதற்கும் நாட்டின் அமைதி மற்றும் சர்வதேச இணக்கப்பாடு தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி நல்லதொரு நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தம்முடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க உட்பட மேலும் சில பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும்.தேசிய ஐக்கியம், சர்வதேச ரீதியில் இலங்கை மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்து அங்;கு தெரிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவலில் குறிப்பிடப்பட்ள்ளது

No comments:

Post a Comment