மலையகத்துக்கென்று ஓர் சாபம் இருக்கிறது. ஒன்று வயதுவந்த பெண் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவது. ஆண்பிள்ளைகளை கடைகளில் வேலைக்கு விடுவது. தொன்று தொட்டு மலையகத்தில் இதுதான் நடந்துக் கொண்டு வருகிறது.
இப்படியானவர்கள் தலைநகரில் ஏதாவது ஒரு முறையில் முன்னேறி வந்தாலோ அல்லது கொஞ்சம் தலையெடுத்தாலோ எங்கள் அரசியல் வாதிகளின் நெஞ்சு பொறுக்காது. எங்கே தன்னை விட ஒருவன் மிஞ்சி விடுவானோ என்ற பயத்தில் அவர்களை ஆரம்பத்திலேயே முடக்கி விடுவார்கள்.
அப்படியானதோர் சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. பிரபலமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவர் கொழும்பில் வர்த்தகம் செய்து வருபவர். தன் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்களை தன் அரசியல் இலாபத்திற்காக தன் மூத்த அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கி இருக்கிறார். பெண்களை இப்படி எல்லாம் இழிவுப்படுத்திவிட்டு ஒவ்வொரு நாளும் மலையக மக்களுக்காக குரல் கொடுப்பதாக பத்திரிக்கைகளில் அறிக்கையும் விடுகிறார். தலவாக்கலை வட்டகொடை பகுதிகளில் வாழும் பெண்களையே இவர் இத்தகைய துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தன் வியாபார எதிரிகளை தனக்கிருக்கும் அதிகார பலத்தால் முடக்கப்பார்க்கிறார். பாதாள உலகினரைக் கொண்டு அவர்களின் உடமைகளை சூறையாடல், சொத்துக்களை பலாத்காரமாக பிடுங்கி எடுத்தல் அவர்களின் பாடசாலை சான்றிதழ் முதல் கடவுசீட்டு வரை அத்தனையையும் பிடுங்கிக் கொண்டு அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்குகின்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது சட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடவும் அவர் அஞ்சுவதில்லை. மேலும் 'எனக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு என்னால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்ற எக்களிப்பு வேறு.
இப்படியானவர்களிடம் இருந்து எமது மக்களை காப்பாற்ற யாருமே இல்லையா..?
No comments:
Post a Comment