Sunday, November 20, 2011

நைஜர் நாட்டுக்கு தப்ப முயற்சித்த கடாபியின் மகன்- சிக்கியது எப்படி?

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி கடந்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதி தனது சொந்த ஊரான சிர்தே நகரில் புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாக அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் குடும்பத்துடன் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்தனர்.

கடாபியின் மற்றொரு மகனும், ராணுவ கமாண்டருமான சயீப் அல்-இஸ்லாம் (39) தலைமறைவானார். அவரை புரட்சிபடை தொடர்ந்து தேடி வந்தது. இந்த நிலையில், தெற்கு லிபியாவில் ஒபாரி நகரில் இருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் பதுங்கியிருந்த போது புரட்சி படையிடம் சிக்கினார்.

அப்போது அவருடன் 15 உதவியாளர்கள் இருந்தனர். இவர்கள் 3 வாகனங்களில் இருந்தனர். அவர்களுக்கு பின்னால் 2 கார்கள் வந்தன. அதில் சயீப் அல்- இஸ்லாமும் மற்றும் 4 பேரும் இருந்தனர். அவர்களிடம் புரட்சி படைவீரர் அகமது என்பவர் நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள் என விசாரித்தார். அப்போது அவர்களில் ஒருவன் சயீப் அல்- இஸ்லாமை காட்டி இவரது பெயர் அப்துல்கலாம். இவர் ஒரு சமாதான தூதுவர் என்றான். இதற்கிடையே, சயீப் அல்- இஸ்லாமை புரட்சி படைவீரர் அடையாளம் கண்டு கொண்டார்.

இதை தொடர்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் தெரிவிக்காமல், துப்பாக்கி சண்டையில் ஈடுபடாமல் சரண் அடைந்தார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மிகவும் பயம் கலந்த முகத்துடன் இருந் தார். ஏனெனில் தான் பிடி பட்டவுடன் சுட்டு கெல் லப்பட்டு விடுவோம் என நினைத்தார். ஆனால் அது போன்று நடக்காததால் நிம்மதி பெருமூச்சு விட்டு சகஜ நிலைக்கு திரும்பினார். இதை தொடர்ந்து அவர் விமானம் மூலம் ஷின்பான் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விரைவில் அவர் தலைநகர் திரிபோலிக்கு கொண்டு செல்லப்பட உள்ளார். அங்கு அவர் மீது சட்டப்பூர்வமான விசாரணை நடைபெறும் என இடைக்கால அரசின் பிரதமர் அப்துல் ரகீம் அல்-கெயிப் தெரிவித்தார். பிடிபட்ட போது சயீப் அல்-இஸ்லாம் லிபியா பாரம் பரிய உடை அணிந்து இருந்தார். கருப்பு நிறத்தில் அடர்த்தியான தாடி வைத்து இருந்தார். அவரது மணிக்கட்டு மற்றும் 2 விரல்களில் காயத்துக்கான கட்டுகள் போட்டு இருந்தார்.

கடந்த மாதம் நேட்டோ படை விமானங்கள் வீசிய குண்டு வீச்சில் அவருக்கு காயம் ஏற் பட்டிருந்தது. சயீப் அல்-இஸ்லாம் மீது சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனி தா பிமான மற்ற முறை யில் பொதுமக்களின் உயிரை பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட் டுள்ளார். கடாபி கொல்லப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சயீப்-அல்-இஸ்லாம் நைஜர் நாட்டுக்கு தப்பி செல்ல முடிவு செய்தார்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து உதவியாளர்களுடன் தயாராக இருந்த நிலையில் புரட்சிபடை வீரரிடம் சிக்கினார்.

3 comments :

Anonymous ,  November 20, 2011 at 8:50 PM  

Will there be a fair trial? Never.
He should have taken ICC Hague immediately.
Cruelty and callousness are very common.International standard,democracy,human rights,
fair trial are symbolic words but
practically nothing.

Anonymous ,  November 21, 2011 at 6:57 AM  

These people are stupids they don't learn any lessons from the past. All the dictators will have the same end.

Anonymous ,  November 21, 2011 at 7:48 PM  

Libyan campaign is a mistake,based on ill conceived principles.It's almost a political provocation.This what come out from the world politicians,except a few.There is no need of giving a detailed explanation to the rest.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com