தவறான முடிவை எடுத்தவர்கள் வெட்கமில்லாமல் பதவியில் இருக்கிறார்கள். விமல்
தொடர்ச்சியாக மூன்று தடைவைகள் பிழையான முடிவுகளை எடுத்த தலைவர்கள் மக்கள் விடுதலை முன்னணியில் எவ்வாறு தொடர்ந்து பதவி வகிக்க முடியும் என்ற அமைச்சர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார். 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரணதுங்க அரசாங்கத்துடன் இணைந்து கூட்டமைப்பு ஆட்சியை ஏற்படுத்தியமை, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உழைத்தமை, 2010 ஆம் ஆண்டுஇடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது சரத்பொன்சேகாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகியன பிழையானதென்றால், சரியானது எது என்று தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிடம் வினவுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் செய்த சகல விடயங்களும் பிழையானவையென்று தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் தற்போது செய்யும் விடயங்களை சிறிது காலத்தின் பின்னர் பிழையானதென்று குறிப்பிடுவார்களாயின் அது புதுமையான விடயமாக இருக்காது என்றும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டு அரசியலில் சிவப்பு கொடி எந்த கட்சியில் இருந்தாலும், அந்த கட்சியினர் ஈட்டி தந்த வெற்றிகளை மறக்க கூடாது 2004 ஆண்டு கூட்டமைப்பை அமைத்ததன் மூலமாக நாடு இரண்டாக பிளவுபட இருந்தமை தடுக்கப்பட்டது. 2005 இல் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்ததன் மூலம் அவரது வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடிந்தது. அதன் பின்னர் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் பயங்கர வாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டி நாட்டை மீட்க முடிந்தது.
நாட்டுக்காக அன்று பெற்றுக்கொடுத்த வெற்றிகளை மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் தவறானது என்று குறிப்பிடுவது அவர்களது வங்குரோத்து நிலையை எடுத்துக்காட்டுகிறது என்றார்.
0 comments :
Post a Comment