பதிலளிக்காது சமாளித்தார் தினேஸ்
தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் 893 பேர் கைது செய்யப்பட்டு தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். இவர்களில் 64 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தினேஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
வழக்கு தாக்கல் செய்யாமல் 259 பேரும் வழக்கு தாக்கல் செய்து பிணை வழங்கப்படாத 33 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கருணா அம்மான், கே.பி, தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு சரியான பதிலளிக்கத் தவறிய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் சிலருக்கு விசேட வரப்பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் சிலருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் மாத்திரமே குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment