பாலியல் செயற்பாட்டை தூண்டும் மருந்துகளை உட்கொள்வது தொடர்பில் அவதானம் தேவை
பாலியல் செயற்பாட்டை தூண்டக்கூடிய மருந்து வகைகளை உட்கொள்ளும் விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறு சுககாதார அமைச்சு எச்சரித்துள்ளது. பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு பல்வேறு பெயாக்ளில் மாத்திரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மருந்து வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் வாசைன திரவியங்கள் மற்றும் ஒளடதங்களை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட மருந்துப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற போதும் ஆறு வகையான மருந்துப்பொருட்களே அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியர்களின் ஆலோசனையின்றி உட்கொள்ளும் ஒரு சில பாலியல் செயற்பாட்டை தூண்டும் மருந்துகளால் மனச்சோர்வு , வாந்தி , குருதி அமுக்கம் , மாரடைப்பு , நரம்புக்கோளாறுகள் , வலி குணங்குறிகள் , நிறைகுறைவு, வயிற்றுவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ள்து. இந்த வகையான மருந்துகளை உட்கொள்ளமுன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment