அக்குரணை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட தொழிபதிபரின் இல்லத்திற்கு கொள்ளையிடுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று நபர்களை துப்பாகிகள் அதற்கான ரவைகள் மற்றும் கூரிய கத்ததிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகந நபர்கள் மூவரும் போலியான அடையாள அட்டை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் கொள்ளச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைவாசகம் இருந்து விட்டு ஒரு மாதத்திற்கு முன் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் மூவரும் மாவனல்லை மற்றும் பிலியந்தல பிரதேசங்களைப் வதியிடமாகக் கொண்டவர்கள். பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்திருந்தiதைக் கண்டு அவதுகொட பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவலை அடுத்தே பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது இவர்களது களவு திட்டம் வெளிவந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த மூவரும் பஸ்ஸில் கண்டிக்கு வந்து அவ்விடத்திலிருந்து மூச்சக்கர வண்டியில் அலவதுகொட அக்குரணைப் பிரதேசத்திற்கு வந்தனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்குரணைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் வழங்கிய தகவலுக்கேற்ப இந்த தொழிலதிபரின் இல்லத்திற்கு இந்த மூவரும் கொள்ளையிட வந்ததாக பொலிஸ் விசாரணையின் போது தெரிவந்துள்ளது.
No comments:
Post a Comment