புத்தளம் பிரதேச சபையின் மூலம் நடத்தப்படும் முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த மாதங்களாக வழங்கப்பட வில்லை என முன்பள்ளிப் பாடசாலைகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதேச சபையின் கீழ் 43 முன் பள்ளிப் பாடசாலைகள் உள்ளன. அதில் கல்வி பயிலும் சிறார்கள் 1000 பேர் வரை உள்ளனர்.
இந்த முன்பள்ளிப் பாடசாலையில் மூன்று பாடசாலைக்கு நிரந்தர கொடுப்பனவு வழங்கபடுகிறது. அது தவிர ஏனைய முன் பள்ளிப் பாடசாலைகள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவின் கீழ் சேவையாற்றி வருகிறார்கள்.
இந்த முன் பள்ளிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கொடுப்பனவு வழங்கப்பட வில்லை. இதனால் இவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக முன் பள்ளிப் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment