Monday, November 14, 2011

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை குறையும் - சஜீத் பிரேமதாச

தனியார் வர்த்தகத்துறையை அரசாங்கம் கையேற்கத் தீர்மானிதுள்ளதன் காரணமாக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவோர் விரைவில் குறையவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டின் போது இந்த நாட்டிற்கு கிடைத்த வெளிநாட்டு முதலீடாக அமெரிக்கா டொலர் மிலியன் 800 ரூபாவும், 2009 ஆம் ஆண்டின் போது அமெரிக்கா டொலர் மிலியன் 600 ரூபா வரையும், 2010 ஆம் ஆண்டின் போது அமெரிக்கா டொலர் மிலியன் 500 ரூபா வரையும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பறிமுதல் சட்டத்தின் ஊடாக 36 வியாபார நிறுவனங்களை அரசாங்கம் கையேற்கவுள்ளதாகவும், இத் தீர்மானத்திற்கு இலங்கை முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment