இலங்கைக்கு அருகில் பூகம்பம்
இலங்கைக்கு தென்மேற்கே சுமார் 341 கிலோமீற்றர் தொலைவில் நேற்று மாலை 4.7 ரிச்டர் அளவிலான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.
எனினும் இப்பூகம்பத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவுமில்லை என சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பிற்கு தென்மேற்கே 341 கிலோமீற்றர் தொலைவில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று இலங்கையின் காலி- பலப்பிட்டிய , அம்பேகம பிரதேசத்தில் சிறிய அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment