யுத்தம் முடிவடைந்தாலும் படையினர் சேவையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள். விமல்.
யுத்தம் முடிவடைந்து விட்ட போதும் இராணுவத்தினரோ சிவில் பாதுகாப்பு படையினரோ சேவையிலிருந்து விலக்கப்பட மாட்டார்கள் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 5 ஆம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடியபோது ஆளும் தரப்பு சார்பில் இன்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையில் பங்களிப்பு செய்தது மட்டுமல்லாமல் தேசத்தின் அபிவிருத்தி பணிகளிலும் பாரிய பங்களிப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
அன்று முதல் இன்று வரை நாட்டிற்காக படைகள் பெரும் பங்களிப்பு செய்து வருவதாகவும் அவர் கூறினார். பாராளுமன்ற மைதனம் புனரமைப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
படையினர் அபிவிருத்தி பணியில் ஈடுபடுத்துவது நாட்டை இராணுவமயமாக்கும் செயல் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறினார். மைதானம் புனரமைப்பு பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படுவதை நாட்டை இராணுவமயப்படுத்தும் செயல் என சர்வதேசத்திற்கு தெரிவிக்க ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.
அத்துடன் மாத்தறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் உரிய எதிர்வு கூறலை வழங்கியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். .
ஆனால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணையொன்று நடத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். எந்தவொரு அதிகாரியையும் பாதுகாக்க போவதில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார.; வளிமண்டல திணைக்கள அதிகாரிகளின் செயல்பாடுகளை விசாரிப்பதற்கு சுயாதீன குழுவொன்று அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment