பொலிஸ் நிலையங்களை தாக்க வேண்டாம். ஜனாதிபதி
சிறிய ஒரு சம்பவத்திற்கு கூட கலவரமடைந்து பொலிஸ் நிலையத்தை தாக்குவதும் பொலிஸ் நிலையத்தின் மீது தீ வைப்பதும் தற்போது மக்களின் பழக்கமாகவுள்ளது. சட்டத்தை யாரும் கையிலெடுக்க தயாராக வேண்டாம், சட்டத்தை நிலைநிறுத்த பொலிசார் உள்ளனர். பொலிசாருக்கு எதிராக முறைப்பபாடுகள் இருந்தால் அதனை சரியாக விசாரணை செய்து வழக்குத்தாக்கல் செய்ய முடியும். மக்களுக்கு பொலிசாரின் அதிகாரத்தை கையிலெடுக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் வைத்து குறிப்பிட்டார்.
24 கோடி ரூபாவில் கட்டப்பட்டுள்ள தங்கல்ல பொலிஸ் நிலையத்தை திறந்த வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்சொன்னவாறு குறிப்பிட்டார். சமாதானத்தை பாதுகாக்க பொது மக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் நல்லுறவு இருக்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்திலேயே தமக்கு வேதனம் வழங்கப்படுகிறது என்பதை பொலிசார் புரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் நிலையத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஒரு கோடி ரூபா பெறுமதியான நஸ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment