Saturday, November 12, 2011

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிப் பிரயோகம். மர்மம் தொடர்கின்றது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சப்தம் பட,. பட வென ஒலித்தது. ஆனால் யார் ஈடுபட்டார்கள், என்ன நடந்தது என்பதை அமெரிக்க போலீசார் இன்னும் உறுதியான தகவலை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி சண்டையில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றாலும் வெள்ளை மாளிக‌ை அருகே நடந்திருக்கிறது .
அமெரிக்கா அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் சாதாரணமாக ஒரு சம்பவம் நடந்து விட்டால்கூட பெரும் பரபரப்பையும், உலகம் முழுவதையும் கவனத்தில் திசை திரும்பி விடும் . இங்கு இரவு 10 மணிவாக்கில் இரண்டு கார்களில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதனால் பட, பட சப்தம் மட்டுமே கேட்டது தொடர்ந்து அனைவரும் படு பயத்தில் அதிர்ந்து போயினர். சில நிமிடம் மட்டுமே நீடித்த இந்த சண்டையில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.

வாஷிங்டனில் பென்சில்வேனியா அவென்யூ அருகே 1 6வது தெருவில் நடந்த இந்த சம்பவம் குறித்து பார்க் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; வெள்ளை மாளிகையில் இருந்து அரை மைல் தூரத்தில் இருக்கும் இந்த பகுதியில் காரில் இருந்த படி துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக மக்கள் தகவல் கூறினர். இதன் அடிப்படையில் போய் பார்த்த நேரத்திற்கு அது முடிந்து விட்டது. யார் ஈடுபட்டது என்பது குறித்து இன்னும் முழு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். காரில் இருந்து ஏ.கே,,47 ரக துப்பாக்கி இருந்ததாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு மறுத்து பதில் எதுவும் சொல்லவில்லை.

வெள்ளை மாளிகை அருகே நடந்த இந்த சம்பவத்தின்போது அதிபர் ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லை தற்போது கலிபோர்னியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment