Thursday, November 3, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்ச்சிக்கின்றது –பசில்

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ பல தடவைகள் சமாதான பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பங்களை வழங்கினார் ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை புலிகள் அன்று ஏற்றிருந்தால் இன்று நிலமை வேறு விதத்தில் இருந்திருக்கும். எனினும் புலிகள் அமைப்பானது இறுதித் தருணத்தில் ஏதாவதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என்று நம்பியது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது ? என்று கேள்வி எழுப்பியுள்ள பசில் ராஜபக்ஷ, இதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது? அதாவது தாங்களும் ஏமாற்றமடைந்து தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்கு முயற்ச்சிக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தலையிடக்கூடிய முழுமையான உரிமை இந்தியாவுக்கு இருக்கிறது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் இந்த பிரச்சினையில் தலையிடுவதற்கு உரிமை கொண்டுள்ள இந்தியா கூட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு திட்டம் ஒன்றுக்கு வரவேண்டும் என்று கூறுகின்றது. ஆனால் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை எற்டபடப் போகின்றது என்பதே முக்கியமான விடயமாகும் என்று அந்த செவ்வியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனுராதபுரம் -திருகோணமலை வீதி புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றுகையில் பின்வருமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார், எமது நாட்டிலிருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் . சில நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராசபக்ஷவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்ச்சித்து வருகின்றது எனவே சகலரும் பேதம்களை மறந்து நாட்டையும் நாட்டு தலைவர்களையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment