தமிழர் காணிகளை ஹத்துரு சிங்க உத்தியோக- பூர்வமாக எமில்டாவிடம் கையளிக்கின்றார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளலாய் இடைக்காடு பிரதேசங்களில், 24 வருடங்களின் பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வளலாய் இடைக்காடு பகுதிகளிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 300 குடும்பங்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதேசங்களை, யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிஙக, எதிர்வரும் 29 ஆம் திகதி, உத்தியோகபூர்வமாக, யாழ். அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளார்.
வளலாய், இடைக்காடு போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவாகளின் விபரங்கள், திரடப்படுகின்றன. இதுவரையில் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், மீள்பதிவு செய்வதற்காக, பிரதேச சபையினை சனி, ஞாயிறு தினங்களிலும் திறந்து வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை காணிகளை பதிய முடியாது போனவர்கள், இலகுவில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சில விடயங்களை திரிவுபடுத்தி, செய்திகள் வெளியிடப்படுகின்றன. உண்மை நிலையை கண்டிப்பாக, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் தனி குடும்பங்களாக பிரிந்து சென்ற பலர், இன்று பல குடும்பங்களாக வந்து, அனைவருக்கும் இடம் ஒதுக்கித் தருமாறு கேட்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் எப்படி இடமொதுக்கிக் கொடுக்க முடியுமென, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment