Tuesday, November 8, 2011

நோர்வே சமாதான முயற்சிகளின் மதிப்பீடு வெள்ளியன்று வெளியாகிறது!

கருத்தருங்கில் எரிக் சொல்ஹைம் பங்கு பெறகிறார்!

இலங்கையின் நோர்வேயால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யுப்பட்டுள்ள கருத்தரங்கு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் இலங்கைக்கான சமாதான முயற்சியின் முன்னாள் சிறப்புத்தூதரும் நோர்வேயின் சூழல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹைம் கலந்து கொண்டு மதிப்பீட்டறிக்கை தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

1997 - 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பொறுப்பு நோர்வே பேர்கன் நகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Christan Michelsen Insititute (CMI) மற்றும் இலண்டன் பல்கலைக் கழகத்தின் School of Oriental and African Studies (SOAS) ஆகிய நிறுவனங்களிடம் நோர்வே வெளிவிவகார அமைச்சினால் NORAD ஊடாகக் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிறுவனங்கள் மேற்கொண்ட மதிப்பீட்டு முடிவுகளை வெளியிடும் நோக்குடன் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இக் கருத்தரங்கில் மதிப்பீட்டுக் குழுத்தலைவர் Gunnar oslash மதிப்பீட்டறிக்கையின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தி கருத்துரை வழங்கவுள்ளார்.

இக்கருத்தரங்கில் பங்குபற்றுபவர்கள் கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்புக்களும் கருத்தரங்கு நிகழ்ச்சி நிரலில் வழங்கப்பட்டுள்ளதோடு நோர்வே வெளிவிவகார அமைச்சினால் ஓழுங்கு செய்யப்படும் விவாத அரங்கு ஒன்றும் கருத்தரங்கில் இடம்பெறகிறது.

மேற்படி அறிக்கையில் புலிகள் , மற்றும் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com