Thursday, November 10, 2011

புதிய யுகத்தினுள் பிரவேசிக்கும் கிழக்கு மாகாணம்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை, புதிய யுகத்தில் பிரவேசித்துள்ளது. சீ பிளேன் சேவை, இம்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார் டெக்ஸி அல்லது சீ பிளேன் சேவையினால், இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக, தற்போது 13 மாவட்டங்களுக்கு சீ பிளேன் விமான சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 14 மாவட்டங்களுக்கு இச்சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு வருகை தந்த முதலாவது சீ-பிளேன், திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதியில், இறங்கியது.

சூரிய சக்தியின் மூலம் உலகெங்கும் சுற்றி வரும் கப்பலொன்று, ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்ஜதுள்ளது. இந்த கப்பல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். சூரிய சக்தியினால் இயங்கும் இக்கப்பல், உலகெங்கும் சுத்தி வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது. 30 மீPட்டர் நீளமும், 23 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில், 30 சிற்பந்திகள் வருகை தந்துள்ளனர்.

No comments:

Post a Comment