புலிகளின் மாவீரர் தினத்தில் தற்போது அச்சமில்லை என்கிறார் அமைச்சர் டளஸ்
புலிகளின் மாவீரர் தினத்தில் தற்போது அச்சமில்லை,ஒரு காலகட்டத்தில் நவம்பர் மாதம் 26ம் திகதி மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்டது.இது நாட்டு மக்கள் அனைவரும் இதய சுத்தியுடன் யோசிக்க வேண்டிய விடயமாக இருப்பதாக அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
காலி – பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில் கூறியுள்ளதாவது,
ஒரு காலகட்டத்தில், நவம்பர் மாதம் 26ம் திகதி மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்டது.புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்த தினத்தை மாவீரர் தினமாக கொண்டு, கொழும்பிலும், நாட்டிலும் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்றன.
இந்த தினத்தை கருத்தில் கொண்டே நாட்டு மக்கள் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.எனினும் தற்போது அனைவரும் இருதய சுத்தியுடன் சிந்திக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவ்வாறான ஒரு காலகட்டத்தை மாற்றி, தற்போது சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment