இந்திய கடல் எல்லையினுள் நுழைந்த இலங்கை மீனவர்கள் படகுகளுடன் கைது.
இந்தியாவின் கடல் எல்லைக்குள் மீன்பிடித் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் ஒன்பது பேர் அந்நாட்டு ஆந்திராப் பிரதேசத்தில் நிசாம் பட்டணத்தில் வைத்து 21 ம் திகதி இந்திய கடற் பாதுகாப்பு படையின் மூலம் கைது செய்துள்ளதாக இந்திய தூதுவராயத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மீனவர்களுடன் அவர்கள் பிரயாணம் செய்த படகுகள் இரண்டையும் அந்நாட்டு கடற்கரையோரப் பாதுப்பு படையினரின் பொறுப்பிலுள்ளதாக இந்த தகல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்காக சென்ற கல்ப் ஸ்டார் மரீனா மற்றும் சம்பா படகுகள் இரண்டுடன் மற்றம் அதிலிருந்த மீனவர்களும் ஆவர். இந்த நபர்களைக் கைது செய்யும் பொழுது 3500 கிலோ கிராமமுக்கும் உதிகமான மீன் தொகையும் இருந்துள்ளது. இது குறித்து சகல நவடிக்கையினையும் இந்திய கடற் பாதுகாப்பு படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த மாதம் ஜனவரியிலிருந்து இது வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்காக இந்தியா கடல் எல்லைக்குள் உட்பட்ட 153 இலங்கை மீனவர்கள் மற்றும் 31 இயந்திரப் படகுகள் இந்தியாவின் கிழக்கு கடல் எல்லைக்குள் வைத்து அந்நாட்டு கடல் பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21 ம் திகதி கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் விரைவில் விடுதலை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
0 comments :
Post a Comment