புலிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆண்டு முடிவுக்குள் முடிவாகுமாம்.
இவ்வாண்டு இறுதியை எட்டும்போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட இறுதி எல்ரிரிஈ உறுப்பினர்களையும், சமூகமயப்படுத்த முடியுமென, புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் பல எல்ரிரிஈ உறுப்பினர்களை, அடுத்த மாதத்தில் சமூகமயப்படுத்த எதிர்பார்ப்பதாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவிக்கிறார்.
வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன், வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே, ஆணையாளர் இவ்வாறு கூறினார்.
புனர்வாழ்வு செயற்பாடுகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. துரிதமாக முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்திற்கு முன்னெடுக்க முடிந்துள்ளமை, பாராட்டத்தக்கதென, வெளிநாட்டு பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment