Thursday, November 10, 2011

அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்க முற்பட்டவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் மற்றும் மிக் உள்ளிட்ட தாக்குதல் விமானங்களை தாக்கி அழிப்பதற்காக ஸ்டோர்லா விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள மயில்வாகனம் ரமணன் என்பவருக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கனேடிய பிரஜையான மயில்வாகனம் புலிகளுக்கு நீர்மூழ்கி தொழிற்நுட்பங்களை பெறுவதற்காக 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பிரித்தானியா நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியிருந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் கனேடிய காவற்தறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, ரமணன் குறித்த தகவல்கள் தெரியவந்ததாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment